கண்ணதாசனோடு நான்

Saturday, August 26, 2006

கவிஞரின் நினைவுகளில் .....





என்னுள்ளத்திலே அரியணை அமைத்து கோலோச்சிக் கொண்டிருக்கின்ற கவிஞர் கோமகன் கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பணமாக இந்தப்பக்கம் அமைகின்றது.

உள்ளம் அழும் போது, உணர்வுகள் தீயாய்ச் சுடும்போது, உறவுகள் முள்லாய்க் குத்தும் போது. காதல் இதயத்தைத் தீண்டும் போது, பாசம் இனிமையான கீதத்தை தென்றலாய் வீசும்போது உள்லத்தி எழுவது கவிதையுணர்வுகளே !

உலகம் புரியாத பருவத்திலே ! பொறுப்புக்களை அறியாத காலத்திலே ! நெஞ்சத்தில் கரைபுரண்டோடும் உணர்ச்சிகளை எப்படி வாய்க்காலிட்டு வரம்புக்குள் கொண்டுவருவதென்று தெரிவதில்லை.

அப்படியான காலத்திலே தான் தனது திரைகானமெனும் சாவியெடுத்டு எனது நெஞ்சமெனும் இரும்புக்கதவைத் திறந்தார் கவிஞர். திறந்தது மட்டுமல்ல, துருப்பிடித்து, தூசிபடிந்து கிடந்த பல உதிரத்து துளிகளுக்கு புது உயிர் கொடுத்தார். நாடி, நரம்புகளில் ரத்தத்தோடு சேர்ந்து பாய்ந்த அந்தத் தமிழின் உயிருக்கு ஒரு உருவம் கொடுத்தது கவிஞரின் பாடல்களில் கலந்திருந்த அந்தத் தமிழ் எனும் தெள்ளமுதே.

இது ஓர் ஆரம்பமே ! இங்கு கவிஞர் சம்மந்தப்பட்ட பலவும் பகிரப்படும்.

அன்புடன்
கவியரசரின் தாசன்
சக்தி சக்திதாசன்